கொரோனா பரவவேண்டும்: 60 விகித ஆட்களுக்கு பரவினால் பின்னர் பரவாதாம் ஒரு புது தத்துவம்!

கொரோனா பரவவேண்டும்: 60 விகித ஆட்களுக்கு பரவினால் பின்னர் பரவாதாம் ஒரு புது தத்துவம்!

ஹெட் இமியூனிட்டி(“HERD IMMUNITY”) என்ற ஒரு புது தத்துவதை, பிரித்தானிய அரசு முன் வைத்துள்ளது. அது என்னவென்றால். நாட்டில் 60% சதவிகித மக்களுக்கு கொரோனா தொற்று வரவேண்டும். அப்படி என்றால் கொரோனாவால்,  மேற் கொண்டு தொற்ற முடியாத நிலை உருவாகும் என்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணாம் நூதனமாக இருக்கலாம். உங்கள் உடலில் கொரோனா வைரஸ் தொற்றிய உடனே. உங்கள் ரத்ததில் உள்ள வெள்ளை செல்கள் அதனை எதிர்த்து போராடும். அதேவேளை உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, வைரசுக்கான திரவம் ஒன்றை தயாரித்து அதனை அழிக்கும்.

குறித்த பதார்த்தம் உங்கள் உடலில் பல ஆண்டுகள் இருக்கும். எனவே,  இயற்கையாக ஒரு முறை கொரோனா வந்தால் மறு முறை அது தொற்றாது என்கிறார்கள் . சிலவேளைகளில் குறித்த திரவம் இல்லாமல் போனால் கூட. மறு முறை கொரோனா வைரஸ் தொற்றினால். உங்கள் உடலுக்கு தெரியும் என்ன திரவத்தை மீண்டும் உடனே தயாரிக்க வேண்டும் என்று. எனவே உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் உடலில் உருவாகிவிடும். அப்படி 60 % சதவிகிதமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு வந்துவிட்டார்கள் என்றால். கொரோனா வைரசால் பரவ முடியாது என்பது , பிரித்தானிய அரசு கூறும் ஒரு வகையான தியறி (புது தத்துவம்)

WHAT IS “HERD IMMUNITY”  AND WILL IT EVEN WORK?

HERD IMMUNITY covid-19 at ukஆனால் இது எந்த வகையில் நடைமுறைக்கு சாத்தியம் ? கொரோனா வைரஸ் வந்து எத்தனை பேருக்கு மாறி இருக்கிறது ? வயதான எல்லா நோயாளிகளும் 90% இறப்பார்கள். இளைஞர்கள் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள். இந்த கோட்ப்பாடு என்பது எந்த அளவுக்கு சாத்தியம் ? கொரோனா பரவாமல் தடுப்பது நல்லதா ? இல்லை பரவ விட்டு தடுப்பது நல்லதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி பிரித்தானிய மக்களை போட்டு குழப்பி உள்ளது அன் நாட்டு அரசு. வழமையாக சின்ன அம்மை நோய், ஏற்பட்டால் சில நாடுகளில் அதனை விழாவாக கொண்டாடுவார்கள்.

ஏன் என்றால் தமது சிறு பிள்ளைகளையும் கொண்டு போய் சின்ன அம்மை போட்ட நபர்களோடு பழக விட்டு. சிறுவயதிலேயே அவர்களுக்கு சின்ன அம்மையை வரவளைத்து விடுவார்கள். நோய் மாறிய பின்னர் , அது வாழ்கையில் மீண்டும் வராது. ஆனால் கொரோனா அப்படி இல்லை. அது எந்த வகையில் செயல்படும் என்று தெரியவில்லை. 44 வயது 32 வயது நபர்கள் கூட கொரோனாவால் இறந்துள்ள நிலையில். எவர் தான் கொரோனா வைரஸ் தொற்றை, வா என்று அழைத்து வாங்கிக் கொள்வார்கள் ? பிரித்தானிய அரசின் இந்த “HERD IMMUNITY” என்ற கோட்பாடு மிக மிக ஆபத்தான ஒரு விடையம் என்று தான் பல பொதுமக்கள் கருதுகிறார்கள்.

srilanka varthamani rule corona Views: 3963
Post by Anitha             
profile photo Anitha

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...

wohan factury america china prodect Views: 3005
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

twice the 6ft social distancing government isolating infected people stay home not good strategy Views: 5209
Post by Kandeepan             
profile photo Kandeepan

13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை !

பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...

covid-19 not going to 16 country Views: 3312
Post by Anitha             
profile photo Anitha

கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்!

உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...

a b c type coroan singapre china italy europ Views: 3708
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

covid-19 Immunity passport to travale Views: 2394
Post by Anitha             
profile photo Anitha

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...

Most Read